33 கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக துவக்க முடிவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், நவரை பருவத்திற்குரிய நெல் அறுவடை செய்யும் பணியை துவக்கி உள்ளனர். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு, 95 நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி உள்ளனர்.இதுதவிர, தேசிய நுகர்வோர் குழு கூட்டமைப்பு குழுவினரும், 33 நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க முடிவு செய்துள்ளனர். ஆக மொத்தம், நவரை பருவத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில், 128 கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது என, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.