உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அழுகிய ஆண் சடலம் கிணற்றில் மீட்பு

அழுகிய ஆண் சடலம் கிணற்றில் மீட்பு

உத்திரமேரூர்:-பெருநகர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த, அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று மீட்கப்பட்டது. பெருநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மானாம்பதி கூட்டுசாலையின் பின்புறம் மேய்ச்சல் புறம்போக்கு நிலப்பரப்பு உள்ளது. அப்பகுதியில் வசிப்போர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில், அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது. இதை கண்ட கால்நடை மேய்ப்பவர்கள் இது குறித்து பெருநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின், போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், கிணற்றில் மிதந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இறந்து கிடந்தவருக்கு 30 - 35 வயது வரை இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை