உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வலியுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில், வீடுகளின் அதிகரிப்பால் இப்பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, அதே பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. சாலையோரம் உள்ள தொட்டி, சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்து உள்ளாது.எனவே, பயன்பாடு இல்லாமல், சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை