உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிதிலமடைந்த அகத்தீஸ்வரர் கோவில் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

சிதிலமடைந்த அகத்தீஸ்வரர் கோவில் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் ஈசனை வணங்கி பேறு பெற்றதால், அகத்தீஸ்வரர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.இக்கோவிலில் இருந்த கொடிமரம், பலிபீடம் மற்றும் உள் சுற்றிலும் இருந்த சுவாமிகளின் சன்னிதிகளும், பின்புறத்தில் இருந்த தெய்வங்களுக்கான தனி சன்னிதிகளும் 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே இடிந்து சேதமானது. நந்திக்கான சன்னிதியை தவிர, கோவில் வளாகத்தில் இருந்த வெளி மண்டபமும் இடிந்து, கலைநயமிக்க தூண்கள் மட்டுமே தற்போது காட்சியளிக்கிறது.இக்கோவிலில், அப்பகுதி வாசிகள் சார்பில், தற்போது தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. பிரசித்தி பெற்ற பழமையான இக்கோவிலை சீரமைத்து, பக்தர்களின் வழிபாட்டிற்கு மீண்டும் கொண்டுவர ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை