மேலும் செய்திகள்
வாக்காளர் சிறப்பு முகாமில் 24,864 மனுக்கள் ஏற்பு
4 minutes ago
நெமிலி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி விழா
8 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளத்தின் மையப் பகுதியில், பொலிவிழந்து விரிசல் ஏற்பட்டுள்ள நீராழி மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில், ஒலிமுகமதுபேட்டை அருகில் சர்வதீர்த்தகுளம் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு, 45 லட்சம் ரூபாய் செலவில், குளம் துார்வாரப்பட்டு, குளத்தை சுற்றிலும் நடைபாதை, சுற்றுச்சுவருடன் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுச்சுவரின் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டும், நடைபாதையில் செடிகள் வளர்ந்தும் குளக்கரை சீரழிந்த நிலையில் இருந்தது. எனவே, குளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத் துறை, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம், புதுப்பொலிவு பெறும் வகையில், 34 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணி நடந்தது. இதில், குளக்கரையின் உட்புறத்தில் உள்ள நடைபாதை சீரமைக்கப்பட்டு டைல்ஸ் பதிக்கப் பட்டன. குளத்தின் வெளிப்புற சுற்றுச்சுவர், குளத்தின் உட்புற தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை சீரமைத்து தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் தீட்டும் சர்வதீர்த்த குளம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இருப்பினும், குளத்தின் மையப் பகுதி பொலிவிழந்து சிதிலமடைந்த நிலையில் உள்ள நீராழி மண்டபம் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே, சர்வதீர்த்தகுளத்தின் மையப் பகுதியில் நீராழி மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
4 minutes ago
8 minutes ago