உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்

குழாய் உடைப்பால் வீணாகி வரும் குடிநீர்

உத்திரமேரூர்:திருப்புலிவனத்தில் குழாய் உடைந்துள்ளதால், குடிநீர் வீணாகி வருகிறது.உத்திரமேரூர் தாலுகா, வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, ஆழ்த்துளை கிணறு அமைத்து, குழாய்கள் மூலமாக மணல்மேடு, திருப்புலிவனம்,உத்திரமேரூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த குழாய்கள் வெங்கச்சேரியில் இருந்து, உத்திரமேரூர் செல்லும் சாலையோரத்தில் புதைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருப்புலிவனம் சந்தைமேடு அருகே செல்லும் சாலையோரத்தில் புதைக்கப்பட்டுள்ள, குடிநீர் குழாய்களில் ஒன்று உடைப்பு ஏற்பட்டுள்ளது.இதிலிருந்து, ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறும் குடிநீர் சாலையோரத்திலேயே தேங்கி நிற்கிறது. எனவே, திருப்புலிவனத்தில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி