உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பகலில் பெய்து வரும் மழையால் அறுவடை செய்ய முடியாமல் அவதி

பகலில் பெய்து வரும் மழையால் அறுவடை செய்ய முடியாமல் அவதி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 12,000 ஏக்கருக்கு மேல் சம்பா பருவ துவக்கத்தில், நெல் சாகுபடி செய்துள்ளனர். அவை, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.புரட்டாசி மாதத்தில், பொன் உருக வெயில் காயும், மண் உருக மழை பெய்யும்' என, சொல்வாடைக்கு ஏற்ப, சமீப நாட்களாக பகலில் கத்திரி வெயிலை போல சுட்டெரித்து வந்தது. இரவு மற்றும் மாலை நேரங்களில் அடிக்கடி மழை பெய்து வந்தன.இந்நிலையில், இரு தினங்களாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் வரை, 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இந்த மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, கோவிந்தவாடி கிராம விவசாயிகள் கூறுகையில், பகலில் பெய்து வரும் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை இயந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்ய முடியவில்லை. மழை நின்ற பின்தான் நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியும்' என்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்.,5ம் தேதி முதல் 6ம் தேதி வரையில், 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, குன்றத்துார், வாலாஜாபாத் ஆகிய தாலுகாக்களில் தலா ஒரு செ.மீ., என, 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை