உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 171 மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்கல்

171 மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்கல்

கீழம்பி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 171 மாணவ - மாணவியருக்கு, 12.53 கோடி ரூபாய் கல்வி கடனை கைத்தறி துறை அமைச்சர் காந்தி வழங்கினார். காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி தனியார் பொறியியல் கல்லுாரியில், கல்வி கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., -எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 171 மாணவ - மாணவியருக்கு, 12.53 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார். இந்த விழாவில், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ