மேலும் செய்திகள்
லாரி மீது டூ - வீலர் மோதி வாலிபர் பலி
22-Oct-2024
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், அங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ், 55.; இவர், வாலாஜாபாத் மளிகை கடைகளில் முட்டை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல, வேலைக்கு சென்ற ராமதாஸ், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில், இரவு 7:00 மணிக்கு, 'டிவிஎஸ். - எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனம் வாயிலாக, முட்டை விற்பனை பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது, வாலாஜாபாத் ரவுண்டானா அருகிலான சாலையில், ராமதாஸ் வாகனத்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், படுகாயம் அடைந்த ராமதாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.வாலாஜாபாத் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.சாலை விபத்தில்தொழிலாளி பலிவாலாஜாபாத், நவ. 13---செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த, கயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 47; இவர், வாலாஜாபாத் அடுத்த அய்யம்பேட்டையில் தங்கி, தேவரியம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மது உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு, வேலைக்கு சென்ற ரவி, இரவு நேர பணி முடித்து, நேற்று காலை, 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில், செங்கல்பட்டு- - காஞ்சிபுரம் சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.அய்யம்பேட்டை அருகே சென்றபோது, வாலாஜாபாத்தில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த டிப்பர் லாரி ஒன்று ராமதாஸ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இதில், நிலை தடுமாறிய ராமதாஸ், முன்னால் சென்ற மினி பேருந்தின் பின்பகுதியில் மோதியதில், தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.வாலாஜாபாத் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
22-Oct-2024