அலுவலக கூரை பெயர்ந்து விழுந்ததால் மின் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஓரிக்கை துணை மின்நிலைய வளாகத்தில், ஓரிக்கை பகுதிக்கான உதவி பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இக்கட்டடம் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் பொலிவிழந்த நிலையில் இருந்தது.இந்நிலையில், நேற்று, காலை 8:00 மணிக்கு அலுவலகம் திறக்கப்பட்டு மின் ஊழியர்கள் வழக்கம்போல பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், காலை 9:40 மணிக்கு திடீரென அலுவலகத்தின் கூரையின் ஒரு பகுதி உள்ள சிமென்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்தது.பணியில் இருந்த மின் ஊழியர்கள், அலறியத்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதில், யாருக்கும் காயும் ஏற்படவில்லை. பின், உதிர்ந்து விழுந்த சிமென்ட் காரையை அகற்றிவிட்டு மீண்டும் பணியை தொடர்ந்தனர்.பழமையான இக்கட்டடம் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் என்பதால், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத கட்டடத்தில் அச்சத்துடன் பணிபுரிய வேண்டிய அவல நிலை உள்ளது என, ஓரிக்கை மின்பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.