| ADDED : நவ 19, 2025 04:40 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 20 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த, வடமாவந்தல் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் பொறியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு நேர்காணல் முகாம், மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் கோகுல் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்தது. கல்லுாரி நிர்வாக இயக்குநர் முனைவர் என்.ரங்கராஜன் முகாமை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் முனைவர் கணேசன் வரவேற்றார். இதில், 100க்கும் மேற்பட்ட அனைத்து துறையைச் சேர்ந்த கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். முகாமில், அக்ஸில்ஸ் இந்தியா, யஷஸ்வி திறன் அகாடமி மற்றும் பேசன்ட் டெக்னாலஜிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மாணவர்களுக்கு பல்வேறு கட்ட தேர்வு நடத்தினர். இதில், தேர்வு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 3 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கும் வகையில், பணி நியமன ஆணையை வழங்கினர். கல்லுாரி மனித வள மேம்பாட்டு துறை பேராசிரியர் எஸ்.சங்கர் நன்றி கூறினார்.