உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சன்னிதி தெருவில் நடைபாதை ஆக்கிரமிப்பு

காஞ்சி சன்னிதி தெருவில் நடைபாதை ஆக்கிரமிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, பழைய ரயில் நிலையம் வரை, காமாட்சியம்மன் சன்னிதி தெரு உள்ளது. இத்தெருவில் சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை கடைக்காரர்கள் தங்களது கடையை விரிவாக்கம் செய்து ஆக்ரமிப்பு செய்துள்ளனர். மேலும், வீட்டிற்கு செல்லும் படிகளும், வாகனம் செல்வதற்கான சாய்தளமும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், நடைபாதையில் செல்ல வேண்டிய பாதசாரிகள் சாலையின் மையப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை