உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சிக்கு தேதி நீட்டிப்பு

அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டயப்பயிற்சிக்கு தேதி நீட்டிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு பிளஸ் 2 படித்தவர்கள் மே -6ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கும் நபர்கள் www.tncu.tn.gov.inஇணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கும் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன்- 2ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது.மேலும், விபரங்களுக்கு அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம், எண்:5ஏ வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் என்கிற முகவரியிலும், 044- 27237699 என்ற தொலைபேசியில் தொடர்புக் கொள்ளலாம் என, மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை