உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பயிர் காப்பீடு செய்ய ஆக.,14 வரை கால நீட்டிப்பு

பயிர் காப்பீடு செய்ய ஆக.,14 வரை கால நீட்டிப்பு

காஞ்சிபுரம்:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, ஆகஸ்ட் 14 வரை அவகாசம் அளித்து கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக, காஞ்சி கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, ஜுலை 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2025- - 26 சொர்ணவாரி நெற்பயர் காப்பீட்டிற்கான காலவரம்பு ஆக.,14ம் தேதி, வரை இத்திட்டத்தில் காப்பீடு செய்யாத விவசாயிகள் மட்டும் காப்பீடு செய்யலாம் நெல் பயிருக்கான விதைப்பு காலம், மே முதல் ஜூன் வரை உள்ளது. எனவே, நெல் பயிரிடும் விவசாயிகள், ஆகஸ்ட் 14ம் தேதிக்குள், ஒரு ஏக்கருக்கு 726 பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், நடப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ - சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகிய இடங்களில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !