மேலும் செய்திகள்
குடிநீர் தொட்டி சேதம்: அகற்ற வலியுறுத்தல்
11-Mar-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் ஊராட்சியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் பொது குளம் உள்ளது.இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது, பொது குளம் பராமரிப்பு இல்லாமல், செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது.குளம் தூர்ந்து உள்ளதால், கடந்த பருவ மழையின்போது போதுமான தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால், கால்நடைகள் குடிக்க போதுமானதாக இல்லை.மேலும், ஊராட்சி நிர்வாகம் குளத்தை தூர்வாராமல் மெத்தனம் காட்டி வருகிறது. எனவே, பொது குளத்தை சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11-Mar-2025