உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நீர்வரத்து கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

நீர்வரத்து கால்வாயை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர், -செல்லம்மாள் நகரில் பராமரிப்பு இல்லாமல் உள்ள நீர்வரத்து கால்வாயை, தூர்வாரி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 40,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள, விவசாயிகள் உத்திரமேரூர் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். செல்லம்மாள் நகர், ஏ.பி.சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்கு, புக்கத்துறை நெடுஞ்சாலையோரத்தில் உள்ள நீர்வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, நீர்வரத்து கால்வாய் முறையாக பராமரிப்பு இல்லாததால் செடி வளர்ந்தும், மண் துார்ந்த நிலையிலும் உள்ளது. இதனால், ஏரியில் இருந்து வரும் தண்ணீர், தடையின்றி விளை நிலங்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே, செல்லம்மாள் நகரில் செல்லும் ஏரி நீர்வரத்து கால்வாயை, துார்வாரி சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை