உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொருளீட்டு கடன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் ஒன்றியம், வேடபாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு, திருப்புலிவனம், பெருநகர், கலியாம்பூண்டி, உத்திரமேரூர் உட்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து, விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தும், இருப்பு வைத்தும் வருகின்றனர்.மேலும், விவசாயிகள் நெல் இருப்பு வைத்து, அதன் வாயிலாக பொருளீட்டு கடனும் பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் துவங்கி நேற்று வரை 1,49,000 கிலோ நெல் இருப்பு வைக்கப்பட்டு, அதற்கான பொருளீட்டு கடன் 18,68,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் யுவராஜ் கூறியதாவது:ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதோடு மட்டுமின்றி, அதை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம். இருப்பு வைக்கும் நெல், பாதுகாப்பாக வைக்க போதிய இடவசதி உள்ளது.எனவே, உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகி, விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன் அடையலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ