உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் உடனுக்குடன் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் உடனுக்குடன் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

அரும்புலியூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த பருவ மழையை தொடர்ந்து, நவரை பட்டத்திற்கு ஏரி, கிணறு மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் அதிக அளவிலான நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.அப்பயிர்கள் வளர்ந்து சில நாட்களாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடையான நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து, கொள்முதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர், கரும்பாக்கம், களியப்பேட்டை, பழவேரி உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், சில நாட்களாக விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வந்த நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்வதில்லை எனல கூறப்படுகிறது.இதனால், இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், கொள்முதல் நிலைய பகுதியின் திறந்தவெளியில் தேங்கி கிடக்கின்றன. தேக்கமான அந்த நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அல்லது அரிசி ஆலைகளுக்கு உடனடியாக ஏற்றிச் சென்றால் மட்டுமே, அடுத்த விவசாயிகளிடம் இருந்து புதிய நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.இதுகுறித்து, அரும்புலியூர் கிராம விவசாயிகள் கூறியதாவது:அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட நெல், மூட்டைகளில் பிடித்து அடுக்கி வைக்கப்படுகின்றன. உடனுக்குடன் கொள்முதல் செய்து ஏற்றி செல்லப்படுவதில்லை.நெல் மூட்டைகள் திறந்தவெளியில் வைக்கப்படுவதால் பனி, வெயில் காரணமாக எடை குறைந்து போகும் நிலை உள்ளது.உடனுக்குடன் லாரிகள் வாயிலாக எடுத்து சென்றால் நெல் மூட்டைகளின் தேக்கத்தை குறைப்பதோடு, மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்க முடியும்.எனவே, இப்பகுதிகளில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, நெல் கொள்முதல் நிலைய அலுவலர் ஒருவர் கூறியதாவது:மாவட்டம் முழுக்க நெல் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அதிக எண்ணிக்கையிலான நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதால், போதிய லாரிகள் கிடைப்பது போன்ற சில காரணங்களால் ஓரிரு இடங்களில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.மற்றபடி கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்படுகிறது. நெல் தேங்கும் பகுதிகளில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்து ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை