விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், வரும் 16ம் தேதி காலை 10:30 மணிக்கு கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடக்கிறது.கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய் துறை, கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த கோரிக்கைகளை விவசாயிள் நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறலாம்.