மேலும் செய்திகள்
தடுப்பின்றி மகாதேவிமங்கலம் குளம்
25-Nov-2024
காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர் கிராமத்தில் இருந்து, திருமால்பூர் கிராமம் வழியாக பனப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளூர், கணபதிபுரம், காஞ்சிபுரம், புள்ளலுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பல்வேறு தேவைகளுக்கு திருமால்பூர், பனப்பாக்கம்,ஓச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தினசரி சென்றுவருகின்றனர்.இச்சாலையில் திருமால்பூர், கீழ்வெண்பாக்கம் ஆகிய இரு இடங்களிலும், சாலை ஓரம் சிறுபாலங்கள் செல்கின்றன. இந்த சிறுபாலங்களின் இருபுறமும் தடுப்பு வசதி அறவே இல்லை. மேலும், சாலை ஓரத்தில் மின் விளக்கு வசதிகளும் இல்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளூர்- - -பனப்பாக்கம் சாலை ஓரம் இருக்கும் சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Nov-2024