உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிற்சாலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு

தொழிற்சாலையில் தீ தடுப்பு விழிப்புணர்வு

உத்திரமேரூர்:ரெட்டமங்கலம் தனியார் தொழிற்சாலையில் உத்திரமேரூர் தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நடந்தது. உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட, ரெட்டமங்கலத்தில் தனியார் டைல்ஸ் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உத்திரமேரூர் தீயணைப்பு துறையின் சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நேற்று நடந்தது. அதில், தொழிற்சாலையில் ஏற்படும் தீ விபத்துகளை, துரிதமாக செயல்பட்டு எவ்வாறு தடுக்க வேண்டும். தீ விபத்து நேரங்களில் எவ்வாறு தீ தடுப்பான்களை கையாள்வது குறித்து, தொழிலாளர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விளக்கினர். இதில், உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன், தொழிற்சாலை மனிதவள மேலாளர் முத்துமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை