உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கண்ணன்தாங்கல் 108 சக்தி பீடத்தில் முதலாம் ஆண்டு ஆராதனை விழா

 கண்ணன்தாங்கல் 108 சக்தி பீடத்தில் முதலாம் ஆண்டு ஆராதனை விழா

கண்ணன்தாங்கல்: நவ. 20-: கண்ணன்தாங்கல், 108 சக்தி பீடத்தில் குருஜி முதலாம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. மதுரமங்கலம் அடுத்த, கண்ணன்தாங்கல் கிராமத்தில், 108 சக்தி பீடம் என, அழைக்கப்படும் ஸ்வர்ண காமாக் ஷி  கோவில் உள்ளது. நேற்று, குருஜி ஸ்ரீலஸ்ரீ காமாக் ஷி சுவாமிகளின் முதலாம் ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, மணி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட குருஜி திருஉருவ படத்திற்கு, 108 சக்தி பீட நிர்வாகி வெங்கடேஷ் மலர் துாவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, நேற்று, காலை 8:00 மணி அளவில், யாக சாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஸ்வர்ண காமாக் ஷி தீபாரதனை நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ