உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 1.6 லட்சம் மீன் குஞ்சுகளை 8 ஏரியில் விட்ட மீன் வளர்ச்சி துறை

1.6 லட்சம் மீன் குஞ்சுகளை 8 ஏரியில் விட்ட மீன் வளர்ச்சி துறை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள 8 ஏரிகளில் 1.6 லட்சம் மீன் குஞ்சுகளை மீன் வளர்ச்சி துறையினர் விட்டுள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஏரிகளில் மீன் வளர்ப்பை அதிகப்படுத்த மீன் வளர்ச்சி துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 10 மாதத்திற்கு தண்ணீர் வற்றாத ஏரிகளை கண்டறிந்து, அதில் ஆண்டுதோறும் மீன் குஞ்சுகளை விட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மீன் குஞ்சுகளை விட மொத்தம் எட்டு ஏரிகள் தேர்வு செய்யப்பட்டன. அதில், ராவத்தநல்லூர், காரணை, பெருங்கோழி, கடல்மங்கலம், நரியம்புதூர், நரியன்பாக்கம், பொற்பந்தல், புலிப்பாக்கம் ஆகிய எட்டு ஏரிகளை தேர்வு செய்து, 1.6 லட்சம் மீன் குஞ்சுகளை மீன் வளர்ச்சி துறையினர் விட்டுள்ளனர்.இது குறித்து, மீன் வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் மீன் வளர்ப்பை அதிகரிக்க, மீன் வளர்ச்சித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அவ்வாறு, ஏரிகளில் மீன் குஞ்சுகளை விடுவதால் ஏரிகளில் மீன் வளம் அதிகரிக்கிறது. மீன்கள் குறித்த வளர்ச்சியை அடைந்த பின், அதை ஊராட்சி நிர்வாகமே ஏலம் விட்டு வருவாய் ஈட்டிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை