தீபாவளிக்கு தின்பண்டம் தயாரிப்போருக்கு உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விதிகளை பின்பற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை
காஞ்சிபுரம், 'தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, கார தின்பண்டம் தயாரிப்போர், விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்; இல்லாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, காஞ்சி புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் எச்சரித்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு, கார தின்பண்டம் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரமான உணவு பண்டங்கள் தயாரித்து விற்பது குறித்து, பல்வேறு விதிமுறைகளை அறிவுறுத்தி உள்ளது. விதிமுறைகளை பின்பற்றாத உணவு நிறுவனங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ள விதிமுறைகள்: இனிப்பு கார தின்பண்டம் தயாரிக்க தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள் பயன்படுத்த கூடாது; இனிப்பு வகைகளுக்கு கூடுதல் நிறமி சேர்க்க கூடாது ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்த கூடாது ஈக்கள், பூச்சிகள் வராமல் இருக்க, தடுப்பு முறைகள் பயன்படுத்த வேண்டும் சமுதாய கூடங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர இடங்களில் இனிப்பு, கார தின்பண்டங்கள் தயாரிப்ப வர்கள் அதற்கான உரிமம் பெ ற்றிருக்க வேண்டும் உணவை கையாள்பவர்கள் கட்டாயம் மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கான விபர சீட்டில், தயாரிப்பாளர் முழு முகவரி, உணவு பொருள் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் தேதி, காலாவதியாகும் நாள், சைவ, அசைவ குறீயீடு ஆகியவை குறிப்பிட வேண்டும் பால் பொருட்கள் தயாரிக்கும் இனிப்பு வகைகள், மற்ற இனிப்புகளு டன் கலந்து வைத்திருக்க கூடாது. எத்தனை நாட்களுக்குள் உபயோகிக்க வேண்டும் என்பதை லேபிளில் அச்சிட வேண்டும் உணவு பொருட்கள் பற்றிய புகார் இருப்பின், 94440 42322 என்ற எண்ணிற்கு 'வாட்ஸாப்' வாயிலாகவும் புகார் அளிக்கலாம். இவ்வாறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.