உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத்தில் ரூ.2.38 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல்

வாலாஜாபாத்தில் ரூ.2.38 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில், 1, 2, 5, 6, 9, 11 ஆகிய வார்டுகளில், சிமென்ட் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அதன்படி, அப்பகுதியில் அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின்கீழ் 1.30 கோடி ரூபாய் செலவில், வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு நேற்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.இதேபோன்று, வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு நகரில், 14.80 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி கட்டடம் ஏற்படுத்த நேற்று, பூமி பூஜை விழா நடைபெற்றது.உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க. எம்.பி., செல்வம் ஆகியோர் பங்கேற்று திட்டப் பணிகளை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து 13-வது வார்டு வி.வி., கோவில் தெருவில், 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைத்த சிமென்ட் சாலை மற்றும் சாய் நகரில், 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட புதிய பூங்கா ஆகியவற்றுக்கான திறப்பு விழா நடைபெற்றது.வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிகளில், பேரூராட்சி செயல் அலுவலர் மாலா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி