மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
12-May-2025
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, வேளிங்கப்பட்டரை, சக்தி விநாயகர் மற்றும் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் அறங்காவலர் உறுப்பினர்கள், கும்பாபிஷேக விழா குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்,டன.நேற்று, காலை 7:30 மணிக்கு, வேதவிற்பன்னர்கள், இரு கோவில் கோபுர விமான கலசத்திற்கும், தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷகம் நடத்தி வைத்தனர்.காலை 10:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடந்தது. விழாவில், வேளிங்கப்பட்டரை, ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
12-May-2025