உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இருங்காட்டுக்கோட்டையில் கஞ்சா விற்றவர் கைது

இருங்காட்டுக்கோட்டையில் கஞ்சா விற்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, இருங்காட்டுகோட்டையில், வடமாநில இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு இரு தினங்களுக்கு முன் தகவல் கிடைத்தது.அதன்படி, போலீசார் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து, இருங்காட்டுகோட்டை, பாரதியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது, 4 கிலோ கஞ்சா இருப்பது தொரிந்தது.இதையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாகு, 34, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, 10 கிராம் பொட்டலமாக மாற்றி, விற்பனை செய்து வந்தது தொரிந்தது.இதையடுத்து, அவரிடமிருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ராமகிருஷ்ண சாகு, 34, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை