உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோட்ராம்பாளையம் தெருவில் குப்பையால் சுகாதார சீர்கேடு

கோட்ராம்பாளையம் தெருவில் குப்பையால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் குறுக்கு தெருவில் குவிந்துள்ள குப்பையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி கோட்ராம்பாளையம் குறுக்கு தெரு வழியாக ஏ.கே.டி., மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர், தும்பவனம், நாகலுாத்து மந்தைவெளி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கோட்ராம்பாளையம் குறுக்கு தெரு, அப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இரு வாரங்களாக அப்பகுதியில் கொட்டப்படும் குப்பையை, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றவில்லை. இதனால், குப்பையில் வீசப்பட்ட கெட்டுப்போன உணவு, மீன், இறைச்சி கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. காற்றில் பறக்கும் குப்பையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கோட்ராம்பாளையம் குறுக்கு தெருவில் குவியலாக உள்ள குப்பையை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ