உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காப்பு காடு சாலையோரம் கொட்டும் குப்பையால் வன விலங்குகள் பாதிப்பு

காப்பு காடு சாலையோரம் கொட்டும் குப்பையால் வன விலங்குகள் பாதிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, காப்பு காடு சாலையோரம் கொட்டப்படும் குப்பையால், மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள் பாதிப்படையும் சூழல் உள்ளன.குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட பனப்பாக்கம், வட்டம்பாக்கம், ஒரகடம் பகுதிகளில், வனத்துறை கட்டுப்பாட்டில் காப்புக் காடு உள்ளது. இதில், ஏராளமான மான் மற்றும் மயில்கள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது, இரை மற்றும் தண்ணீருக்காக இடம் பெயர்ந்து வருவது வழக்கம்.இந்த நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையை ஒட்டியுள்ள இந்த வனப்பகுதியில், பிளாஸ்டிக், உணவு கழிவு, தொழிற்சாலை கழிவுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கொட்டி வருகின்றனர்.பாதுகாக்கப்படும் வனப்பகுதியில், ஆங்காங்கே குப்பை குவியலாக உள்ளது. மேலும், இவை மழைகாலங்களில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, வனப்பகுதிகளில் பல இடங்களில் சிதறி கிடக்கின்றன. இதனால், மான்கள் பாலிதீன் குப்பையை தின்று பாதிப்படையும் சூழல் உள்ளது.எனவே, வனப்பகுதி மற்றும் அவ்வழியாக செல்லும் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ