வெள்ளைகேட் ராஜகுபேரருக்கு தங்ககவச அலங்காரம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ராஜகுபேரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி, மூலவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் தன அபிஷேகம் நடந்தது.தொ டர்நது, மூலவர் ராஜகுபேரர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. பவுர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.