அரசு கட்டடங்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
காஞ்சிபுரம், கோவிந்தவாடி குறு வட்டத்தில், பல்வேறு அரசு கட்டடங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டன. கட்டட திறப்பு நிகழ்ச்சிகளுக்கு, வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் மற்றும் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பெரியகரும்பூர் துவக்கப் பள்ளி கூடுதல் கட்டடம், புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம், கோவிந்தவாடி ஊராட்சியில் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சிகளில், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.