உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நல்லுாரில் அரசு பஸ்கள் நின்று செல்ல எதிர்பார்ப்பு

நல்லுாரில் அரசு பஸ்கள் நின்று செல்ல எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்:நல்லுார் நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக, தாம்பரம் வரையில், தடம்79, அரசு விரைவு மற்றும் சாதாரணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் புறப்படும் அரசு விரைவுப் பேருந்துகள், வாலாஜாபாத், வாரணவாசி, ஒரகடம், படப்பை, மணிமங்கலம் வழியாக தாம்பரம் சென்றடைகின்றன. அ துவே, அரசு சாதாரணப் பேருந்துகள், அய்யன்பேட்டை, நாயக்கன்பேட்டை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்கின்றன. தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணியர், பல்வேறு தேவைகளுக்கு காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத், ஒரகடம், தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதில், நல்லுார் பேருந்து நிறுத்தத்தில், தடம் எண்79, அரசு பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால், நல்லுார் கிராமத்தினர் வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் ஒரகடம், தாம்பரம் ஆகிய மார்க்கங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே, அனைத்து விதமான அரசு பேருந்துகள் நல்லுார் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து துறை அதிகாரி கூறுகையில், 'நல்லுாரில் அரசு பேருந்துகள் நின்று செல்ல அறிவுரை வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை