உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு சிறப்பு முகாம் 769 மனுக்கள் ஏற்பு

அரசு சிறப்பு முகாம் 769 மனுக்கள் ஏற்பு

காஞ்சிபுரம்:உங்களுடன் ஸ்டாலின் முகாமில், 769 நபர்கள் மனு அளித்தனர். படுநெல்லி கிராமத்தில் நேற்று காலையில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். படுநெல்லி, கோவிந்தவாடி, கொட்டவாக்கம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடம், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, 769 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மின் மீட்டர் இணைப்பு பெயர் மாற்றம், முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 22 நபர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வாலாஜாபாத் ஒன்றியக்குழு சேர்மன் தேவேந்திரன். ஒன்றிய கவுன்சிலர்கள் சுனிதா, லோகுதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை