மேலும் செய்திகள்
நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா
04-Sep-2025
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது. காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி நகரில் உள்ள வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில், 17வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று, காலை 8:00 மணிக்கு திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரையில் இருந்து அம்மன் கரகம் புறப்பாடு நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்க்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று, இரவு 10:00 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.
04-Sep-2025