மேலும் செய்திகள்
குட்கா விற்ற இருவர் கைது
16-Oct-2024
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமலாகத்துறை போலீசார், மாவட்டம் முழுதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில், சுங்குவார்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட மொளச்சூர் பகுதியில் உள்ள மளிகை கடையில், போலீசார் நேற்றுசோனையில் ஈடுபட்டனர்.அதில், விற்பனைக்காக குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, கடையின் உரிமையாளர் குமார், 54, வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அதில், அவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில், மூட்டை மூட்டையாக ஹான்ஸ், கூலிப், விமல், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அவரை கைது செய்து விசாரித்ததில், அவரது வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ள துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம், 40, என்பருடன் சேர்ந்து, பெங்களூருவில் இருந்து கூரியர்' வாயிலாக குட்கா பொருட்களை இறக்குமதி செய்து, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுகளில் சப்ளை செய்து வந்தது தெரிந்தது.இதையடுத்து, குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 125 கிலோ குட்கா மற்றும் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்; இதன் மதிப்பு,2 லட்சம் ரூபாய்.
16-Oct-2024