சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
ஸ்ரீ பெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை வழியாக, தினமும் ஏராளமானோர், தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை, இந்த சாலையோரம் வீசி செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், தாசில்தார் அலுவலகத்திற்கு செல்லும் மக்கள், நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக்க, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி. கண்ணன், ஸ்ரீபெரும்புதுார்.