உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வாலாஜாபாத் கருவூலம் வளாகத்தில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

வாலாஜாபாத் கருவூலம் வளாகத்தில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

வாலாஜாபாத், வாலாஜாபாத் கருவூலம் கட்டடத்தை சுற்றி குப்பை குவிந்துள்ளதால் அலுவலகத்திற்கு வருவோர் அவதிக்குள்ளாகி சுகாதார சீர்கேடு அடைந்து வருகின்றனர்.வாலாஜாபாதில், பேருந்து நிலையம் அருகே அரசு கருவூலம் இயங்குகிறது. அதே பகுதியில் சார் - பதிவாளர் அலுவலகமும் செயல்படுகிறது.இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர் வீட்டு மனைகள் மற்றும் விளை நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்குமான பதிவுகள் மேற்கொள்ள தினசரி, சார் - பதிவாளர் அலுவலகம் வந்து செல்கின்றனர்.கருவூலம் கட்டடத்தை சுற்றிலும் பராமரிப்பின்றி ஆங்காங்கே குப்பை குவியலாக காணப்படுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.மேலும், அங்குள்ள குப்பையை கிளறும் வகையில் நாய், பன்றி, மாடு உள்ளிட்டவை உலாவுவதால் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, வாலாஜாபாத் கருவூலம் பகுதியில் குவிந்துள்ள குப்பையை அப்புறப்படுத்தி சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை