மேலும் செய்திகள்
பாதாள சாக்கடை மேன்ஹோல் அடைப்பால் பொதுமக்கள் அவதி
13-May-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, 12வது வார்டு, சந்தோஷ் நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தில், இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் மூடி உடைந்து கழிவுநீர் வழிந்து வருகிறது. இதனால், இரண்டு மாதங்களாக குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் சூழ்ந்து, அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.எனவே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து, மேன்ஹோல் மூடியை சீரமைக்க, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13-May-2025