உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நடைபாதையில் குப்பை குவியல் கோவில் அருகில் சுகாதார சீர்கேடு

நடைபாதையில் குப்பை குவியல் கோவில் அருகில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதியிலும், பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2014ல் நடைபாதை அமைக்கப்பட்டது. கட்டுமானப் பணி முறையாக நடைபெறாததால், நடைபாதையோரம் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர் கற்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே சரிந்து விழுந்தன.கிழக்கு மாட வீதியில், நடைபாதையில், தடுப்புச் சுவர் கற்களை இணைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த துருப்பிடிக்காத இரும்பு உருளை கம்பிகளும் மாயமாகின.முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபாதை குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. மேலும், அப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் கழிவுநீராலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, ஏகாம்பரநாதர் கிழக்கு மாட வீதி நடைபாதையில் கொட்டப்பட்டு உள்ள குப்பையை அகற்றவும், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கவும் மற்றும் நடைபாதையை சீரமைக்கவும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி