உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தோட்டக்கலை துறையினர் ஆர்ப்பாட்டம்

 தோட்டக்கலை துறையினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0' என்ற புதிய திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தோட்டக்கலை துறை ஊழியர்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் நலத்துறையில், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண் பொறியியல், வேளாண், தோட்டக் கலை ஆகிய நான்கு துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரே அலுவலர் நான்கு துறை பணிகளையும் செய்ய வேண்டியிருப்பதாக துறை அலுவலர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். இவற்றை கைவிட தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது முழக்கங்களை எழுப்பினர். நான்கு துறைகளையும் இணைத்து பணியாற்றும் போது விவசாயிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆர்ப்பாட்டத்தின்போது பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட தோட்டக்கலை துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ