உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  180 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

 180 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, குருவிமலை கிராமத்தில், 180 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்டது குருவிமலை கிராமம். இங்குள்ள 200க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். குருவிமலை கிராமத்தி லேயே, உள்ள அரசு ஆட்சேப னையற்ற நிலங்களை கண்டறிந்த அதிகாரிகள், கிராம மக்கள் வசிக்கும் பகுதியிலேயே பட்டா வழங்க முடிவு செய்தனர். பயனாளிகளின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனர். அதில், 180 பேர் தகுதியான பயனாளிகளாக கண்டறியப்பட்டனர். தகுதியான 180 பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி, குருவிமலை கிராமத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை யில் நடந்தது. இதில், தி.மு.க.,- - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - -எம்.எல்.ஏ., சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சப் - கலெக்டர் ஆஷிக்அலி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ