உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் கத்தரிக்கோலால் குத்தி மனைவியை கொன்ற கணவர் கைது

காஞ்சியில் கத்தரிக்கோலால் குத்தி மனைவியை கொன்ற கணவர் கைது

காஞ்சிபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுாரை சேர்ந்தவர் மோகனவேல், 43; டெய்லர். இவரது மனைவி புவனா, 37, தம்பதிக்கு 11 வயதில் மகள் உள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள அனந்தஜோதி தெருவில், வாடகைக்கு வீடு எடுத்த சில மாதங்களாக குடும்பத்துடன் தங்கி வந்துள்ளனர். மோகனவேல் வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். புவனா, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், மனைவி புவனாவிடம், மோகனவேல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மீண்டும் நேற்று மாலை 5:30 மணியளவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால், வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மனைவி புவனாவின் கழுத்தில் மோகனவேல் குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த புவனா மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து உறவினர்கள் சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோகனவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை