உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேவரியம்பாக்கத்தில் மகளிர் சபை துவக்கம்

தேவரியம்பாக்கத்தில் மகளிர் சபை துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில், மகளிர் சபை துவக்கப்பட்டுள்ளது. இந்த மகளிர் சபையின் வாயிலாக, சமூக பொருளாதாரத்தில் பெண்களின் வளர்ச்சி, வீட்டுத்தோட்டம் அமைத்தல், சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில், ஆடை, பூ அலங்கார தொழில்நுட்ப பயிற்சி நேற்று தேவரியம்பாக்கத்தில் துவங்கியது.இந்த பயிற்சி துவக்க விழாவிற்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிற்சி வகுப்பு துவக்கி வைத்தார். இதில், கிராமப்புற பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை