உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு பிள்ளையார்பாளையம் வாசிகள் மனு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவலம்

சாலையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு பிள்ளையார்பாளையம் வாசிகள் மனு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அவலம்

காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், சாலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, காஞ்சிபுரம் கலெக்டரிடம் அப்பகுதியினர் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் பகுதியில், திருவேகம்பன் தெரு உள்ளது. இத்தெருவில் இருந்து, சோளீஸ்வரன் கோவில் ஒத்தவாடை தெருவுக்கும், கச்சியப்பன் தெருவுக்கும் செல்லும் வழி அகலமாக இருந்தது.இதனால், அனைத்து வாகனங்களும் எளிதாக சென்று வர முடிந்தது. ஆனால், இவ்வழியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டு வாசலில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், கழிவுநீர் தொட்டி கட்டுவதும், படிகட்டு கட்டுவது என, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், மருத்துவ அவசரத்திற்கு கூட ஆம்பு லன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல்,தீயணைப்பு வாகனங்கள், இறுதி ஊர்வலம் செல்லும்வாகனங்கள், கார், வேன், கழிவுநீர் அகற்றும் வாகனம்என, எந்த வகையானவாகனமும் சென்று வர முடிவதில்லை. மேலும், ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாவதால், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்துக்கு எளிதான வழியை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை