மேலும் செய்திகள்
பள்ளியில் ஓவிய கண்காட்சி
2 hour(s) ago
மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்
2 hour(s) ago
வேலை வாய்ப்பு முகாமில் 2,072 பேர் பங்கேற்பு
2 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி சுந்தர விநாயகர் நகர், மும்முனை சாலை சந்திப்பில், சாலையின் குறுக்கே உள்ள மழைநீர் வடிகால்வாய் மீது, சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.டெம்பிள் சிட்டி, ஓரிக்கை மிலிட்டரி சாலை, உத்திரமேரூர் சாலைக்கு செல்வோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.வாகன நடமாட்டம் உள்ள சாலையில், கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள சிறுபாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, சாலையின் குறுக்கே செல்லும் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள சிறுபாலத்திற்கு இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago