உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:சாலவாக்கத்தில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த சுற்றுவட்டார கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.உத்திரமேரூர் தாலுகாவில் சாலவாக்கம் முக்கிய பகுதியாக உள்ளது. இந்த பகுதியை சுற்றி 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, நெல், கரும்பு ஆகிய பயிர்களை பயிர் செய்வது பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், நெல் அறுவடை முடிந்து வைக்கோலை வாகனங்களில் வீட்டிற்கு கொண்டுவரும்போது, மின் கம்பிகளில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது ஆண்டுதோறும் நடக்கிறது. இந்த கிராமங்களில் பல தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதிலும், சில நேரங்களில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.தொடர்ந்து, குடிசை வீடுகளிலும் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது. அப்போது, செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இருந்து, 20 கிலோ மீட்டர் துாரத்தில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்படுகின்றன.தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் கழித்து வருவதால், தீ பரவி முற்றிலும் எரிந்து சேதமடைகிறது. எனவே, சாலவாக்கத்தில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த, சுற்றுவட்டார கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி