உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலத்தில் ஓட்டை சரி செய்ய வலியுறுத்தல்

பாலத்தில் ஓட்டை சரி செய்ய வலியுறுத்தல்

உத்திரமேரூர்:நஞ்சுபுரம்- - கட்டியாம்பந்தல் சாலை, 2023- - -24ம் நிதி ஆண்டில், புயல் வெள்ள சேதார நிவாரண நிதி, 48 லட்சம் ரூபாய் செலவில், புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.கட்டியாம்பந்தல் அருகே சாலையின் குறுக்கே மடுவு கால்வாய் உள்ளது. மடுவு கால்வாய் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் வழியே, தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.தற்போது, பாலத்தில் ஓட்டை விழுந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் வழியே, இரவு நேரங்களில் செல்லும்,வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல்,விபத்தில் சிக்குகின்றனர்.பாலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை