உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகத்தடைக்கு வர்ணம் பூச வலியுறுத்தல்

வேகத்தடைக்கு வர்ணம் பூச வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து கீழம்பி வழியாக முசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. கீழம்பியில் உள்ள நுாலகம் அமைந்துள்ள பகுதியில், விபத்து ஏற்படுவதை தவிர்க்க, சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால், இச்சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை