மேலும் செய்திகள்
குளக்கரைக்கு தடுப்பு அவசியம்
21-Aug-2024
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தில் சரஸ்வதி கோவில் அருகில் குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தின் தெற்கு திசையான காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில், குளக்கரையோரம் இரும்பு சட்டங்களால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிழக்கு திசையில் உள்ள சாலையோரம் தடுப்பு அமைக்கப்படவில்லை.இச்சாலை வழியாக பூசிவாக்கம், கிதிரிபேட்டை, நெய்குப்பம், புத்தகரம் உள்ளிட்ட கிராமத்தினர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் குளக்கரையோரம் தடுப்பு இல்லாததால், இரவு நேரத்தில் இப்பகுதியில், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையோரம் ஒதுங்கும்போது தடுப்பு இல்லாத குளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.எனவே, தாங்கி கிராமத்தில் சாலையோரம் உள்ள குளக்கரைக்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
21-Aug-2024