உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு கல்லுாரி விழா மேடை வளாகம் சேதம் செடி, கொடிகளை அகற்ற வலியுறுத்தல்

அரசு கல்லுாரி விழா மேடை வளாகம் சேதம் செடி, கொடிகளை அகற்ற வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள திருப்புலிவனத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரியில், உத்திரமேரூர் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இக்கல்லுாரியில், சிமென்ட் கற்களால் பதியப்பட்ட திறந்தவெளி விழா மேடை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது, விழா மேடை வளாகம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. சிமென்ட் கல் தரை சேதமடைந்து, வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால்,விழா மேடை வளாகத்தில் எந்த நிகழ்ச்சியும் நடத்த முடியாத நிலை உள்ளது.வளாகத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கல்லுாரி நிர்வாகம் இருந்து வருகிறது. மேலும், வளாகத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயில் மண் துார்ந்து, செடிகள் வளர்ந்து உள்ளன.இதனால் மழைநீர் வடிந்து செல்லாமல், அங்கேயே தேங்கும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த செடி, கொடிகள் வளர்ந்துள்ள விழா மேடை வளாகத்தை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ